அமெரிக்காவுக்கு எதிராக போராடி வென்றது வெஸ்ட் இண்டீஸ்

ஹராரே: ஐசிசி உலக கோப்பை தகுதிச் சுற்று ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், அமெரிக்காவுடன் நேற்று மோதிய வெஸ்ட் இண்டீஸ் அணி 39 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஹராரே டகாஷிங்கா ஸ்போர்ட்ஸ் கிளப் அரங்கில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச… வெஸ்ட் இண்டீஸ் 49.3 ஓவரில் 297 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஜான்சன் சார்லஸ் 66 ரன், கேப்டன் ஷாய் ஹோப் 54, நிகோலஸ் பூரன் 43 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), ரோஸ்டன் சேஸ் 55, ஜேசன் ஹோல்டர் 56 ரன் (40 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். அமெரிக்கா பந்துவீச்சில் சவுரவ் நேத்ரவால்கர், கைல் பிலிப், ஸ்டீவன் டெய்லர் தலா 3, நோஸ்துஷ் கெஞ்ஜிகே 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய அமெரிக்கா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து, 39 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஸ்டீவன் டெய்லர் 18, சுஷாந்த் மொதானி 14, ஆரோன் ஜோன்ஸ் 23, ஷயான் ஜகாங்கீர் 39 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி வரை போராடிய கஜானந்த் சிங் 101 ரன் (109 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்),நோஸ்துஷ் கெஞ்ஜிகே 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2, ஹோல்டர், சேஸ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஹோல்டர் ஆட்ட நாயகான தேர்வு செய்யப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் 2 புள்ளிகள் பெற்றது.

The post அமெரிக்காவுக்கு எதிராக போராடி வென்றது வெஸ்ட் இண்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: