திருவாரூர் அருகே ரூ.40 லட்சம் மதிப்புள்ள நமி நந்தி அடிகளார் கோயில் நிலம் மீட்பு

திருவாரூர்,ஜூன் 17: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள், மனைகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தையும் மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அறநிலையத்துறையின் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரையில் ரூ ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்புடைய நிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதை முன்னிட்டு, திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் கிராமத்தில் இருந்து வரும் நமி நந்தி அடியார் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கும் பணி கோயிலின் தக்காரும், திருக்கார வாசல் தியாகராஜசுவாமி கோயிலின் செயல் அலுவலருமான ராஜா தலைமையில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நேற்று அதே கிராமத்தில் நீண்ட நாட்களாக குத்தகை தொகை செலுத்தாமல் ஆக்கிரமிப்பில் வைத்திருந்த ரூ.40 லட்சம் மதிப்புடைய 1.67 ஏக்கர் நஞ்சை நிலமானது மேற்படி செயல் அலுவலர் ராஜா மற்றும் அலுவலர்கள் வெங்கடராமன், ராதாகிருஷ்ணன் மற்றும் பிரியா ஆகியோர் மூலம் மீட்கப்பட்டு அந்த இடத்தில் மேற்படி நபி நந்தி அடியார் கோயிலுக்கு சொந்தமான இடம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டது.

The post திருவாரூர் அருகே ரூ.40 லட்சம் மதிப்புள்ள நமி நந்தி அடிகளார் கோயில் நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: