அதன்படி, சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ₹55.61 கோடி மதிப்பீட்டில் 78.29 கிலோ மீட்டர் நீளத்தில் 452 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு சேமிப்பு நிதித் திட்டத்தின்கீழ் ₹29.71 கோடி மதிப்பீட்டில் 51.37 கிலோ மீட்டர் நீளத்தில் 300 சாலைகள், நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ₹39.39 கோடி மதிப்பீட்டில் 75.16 கிலோ மீட்டர் நீளத்தில் 405 சாலைகள் என மொத்தம் ₹124.71 கோடி மதிப்பீட்டில் 204.82 கிலோ மீட்டர் நீளத்தில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகள் உட்பட 1,157 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் ₹190 கோடிக்கு உட்புற சாலைகளை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 268 கி.மீ கொண்ட 1661 உட்புற சாலைகளை ₹131 கோடி செலவிலும், 34 கி.மீ நீளம் கொண்ட 309 கான்கிரீட் சாலைகளை ₹35 கோடி செலவிலும், 7 கி.மீ நீளம் கொண்ட 124 சாலைகளை ₹4.28 கோடி செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, 307 கி.மீ நீளம் கொண்ட 2,084 சாலைகளை ₹190 கோடி செலவில் சீரமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
The post சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ₹190 கோடியில் 2,084 உட்புற சாலைகள் சீரமைப்பு: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.