இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்: பர்மிங்காமில் நாளை தொடக்கம்

பர்மிங்காம்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே கடந்த 140 ஆண்டுகளாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்த டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடருக்குட்பட்ட ஆஷஸ் தொடர் இந்த முறை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் பர்மிங்காமில் நாளை இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பட்டம் வென்ற உத்வேகத்தில் களம் இறங்குகிறது.

கம்மின்ஸ் தலைமையிலான அணியில் ஸ்மித், வார்னர், கவாஜா, டிராவிஸ் ஹெட், ஸ்டார்க், ஹேசல்வுட் என முன்னணி வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர். மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து சொந்த மண்ணில் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஓய்வை வாபஸ் பெற்று மொயின்அலி மீண்டும் டெஸ்ட்டிற்கு திரும்பி உள்ளார். ஜோரூட், பேர்ஸ்டோ, ஆண்டர்சன், பிராட், ஹாரி புரூக் என சிறந்த லெவன் களம் இறங்குகிறது.

இதுவரை 72 ஆஷஸ் தொடர் நடந்துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 34 ,இங்கிலாந்து 32 முறை தொடரை வென்றுள்ளது. 6 தொடர் சமநிலையில் முடிந்துள்ளன. கடைசியாக 2021-22ல் நடந்த தொடரில் ஆஸ்திரேலியா 4-0 என தொடரை கைப்பற்றியது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் 356 டெஸ்ட்டில் மோதி உள்ளன. இதில் 150ல் ஆஸ்திரேலியாவும், 110ல் இங்கிலாந்தும் வென்றுள்ளன. 96 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

The post இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட்: பர்மிங்காமில் நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: