கோவை – கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரம்: ரூ.400 கோடி ஒதுக்கியது ஒன்றிய அரசு.. 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும்..!!

டெல்லி: கோவை – கரூர் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரூரில் இருந்து கோயம்புத்தூர் வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கென 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோவை முதல் பல்லடம் வரையிலான சாலை ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறையால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்லடம் முதல் வெள்ளக்கோவில் வரையிலான சுமார் 47 கிலோ மீட்டர் சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கென 274 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல வெள்ளக்கோவில் முதல் கரூர் வரையிலான சுமார் 40 கிலோ மீட்டர் நீளமுடைய சாலை விரிவாக்க பணிகளுக்காக 130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவை – கரூர் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரம்: ரூ.400 கோடி ஒதுக்கியது ஒன்றிய அரசு.. 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும்..!! appeared first on Dinakaran.

Related Stories: