மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி

ஜப்பான்: ஜப்பானின் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் தென் கொரியா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியனானது.

ஜப்பானின் நடைபெற்ற மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் சீன அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான
தென் கொரிய அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை கைப்பற்றியது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியடைந்த நிலையில் இன்று முதன் முறையாக இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

The post மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி appeared first on Dinakaran.

Related Stories: