ஒடிசாவில் 288 பேர் பலியான பஹானாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல்: சிபிஐ அதிரடி நடவடிக்கை எந்த ரயிலும் நிறுத்த அனுமதி இல்லை

புவனேஸ்வர்: ஒடிசாவில் 288 பேர் பலியான ரயில் விபத்து நடந்த பஹானாகா பஜார் நிலையத்திற்கு சிபிஐ சீல் வைத்து விட்டது. ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள். இதுதொடர்பான வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் பஹானாகா ரயில் நிலையத்தை சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்து விட்டனர். விபத்துக்கு பிறகு ரயில்தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு தினமும் 7 ரயில்கள் அந்த ரயில் நிலையத்தில் நின்று சென்றன. தற்போது ரயில் நிலையம் சீல் வைக்கப்பட்டு விட்டதால் அங்கு ரயில்கள் நிறுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தென்கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறியதாவது: பதிவு புத்தகம், ரிலே பஹானாகா ரயில் நிலையத்தின் பேனல் மற்றும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்த சிபிஐ ரயில் நிலையத்திற்கு சீல் வைத்துள்ளது. சிக்னல் அமைப்புக்கு ஊழியர்கள் செல்வதை தடைசெய்யும் வகையில் ரிலே இன்டர்லாக்கிங் பேனல் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பு வரும் வரை எந்த பயணிகள் அல்லது சரக்கு ரயிலும் பஹானாகா பஜாரில் நிற்காது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒடிசாவில் 288 பேர் பலியான பஹானாகா பஜார் ரயில் நிலையத்திற்கு சீல்: சிபிஐ அதிரடி நடவடிக்கை எந்த ரயிலும் நிறுத்த அனுமதி இல்லை appeared first on Dinakaran.

Related Stories: