மதுரை பெண் ஐ.ஏ.எஸ் கோட்டயம் கலெக்டரானார்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் புதிய கலெக்டராக மதுரையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி விக்னேஷ்வரி பொறுப்பேற்றார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயஸ்ரீ சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய கலெக்டராக கேரள சுற்றுலாத்துறை மேம்பாட்டுக் கழக இயக்குனராக இருந்த விக்னேஷ்வரி நியமிக்கப்பட்டார். இதையடுத்து கோட்டயம் மாவட்ட 48வது கலெக்டராக விக்னேஷ்வரி பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரையைச் சேர்ந்த இவர் 2015ம் ஆண்டு கேரள கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

இதற்கு முன் இவர் கேரள கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர், சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குனர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். புதிய கலெக்டராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் விக்னேஷ்வரியின் தந்தை வெள்ளைச்சாமி, தாயார் சாந்தி, கணவர் உமேஷ் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர். இவரது கணவர் உமேஷும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மதுரையை சேர்ந்த உமேஷ் தற்போது கோட்டயத்தின் அண்டை மாவட்டமான எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மதுரை பெண் ஐ.ஏ.எஸ் கோட்டயம் கலெக்டரானார் appeared first on Dinakaran.

Related Stories: