தேசியவாத காங்கிரஸ் செயல்தலைவர்களாக சுப்ரியா, பிரபுல் படேல் அறிவிப்பு

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மே 2ம் தேதி கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கினார். ஆனால் அவரது ராஜினாமாவை நிராகரித்த கட்சியின் குழு அவரே தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர்களாக சரத்பவாரின் மகளும் எம்பியுமான சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் முக்கிய நிர்வாகி அஜித் பவார் முன்னிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post தேசியவாத காங்கிரஸ் செயல்தலைவர்களாக சுப்ரியா, பிரபுல் படேல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: