நீட் தர வரிசை பட்டியல் அடிப்படையில் நாடு முழுவதும் பொது மருத்துவ கலந்தாய்வு: தேசிய மருத்துவ ஆணையம் முன்மொழிவு

புதுடெல்லி: நீட் தர வரிசை பட்டியல் அடிப்படையில் நாடு முழுவதும் பொது மருத்துவ கலந்தாய்வை நடத்துவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் முன்மொழிந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 2ம் தேதி தேசிய மருத்துவ ஆணையத்தின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘தற்போதைய விதிமுறைகள் அல்லது பிற தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள எதற்கும் பாரபட்சம் இல்லாமல் நீட் இளங்கலை தேர்வு தகுதிப்பட்டியலின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் மருத்துவ பட்டதாரி படிப்புக்கள் சேர்க்கைக்கு பொதுவான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு முற்றிலும் தேசிய மருத்துவ ஆணையத்தின் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடைபெறும்.

பொது கலந்தாய்வு பல்வேறு சுற்றுகளை கொண்டதாக இருக்கலாம். இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் பொது கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடும். மேலும் பிரிவு17ன் கீழ் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க பொது கலந்தாய்வு நடத்தப்படும், இந்த விதிமுறைகளை மீறி எந்த மருத்துவ நிறுவனமும் பட்டதாரி மருத்துவ படிப்பிற்கு எந்த ஒரு விண்ணப்பதாரரையும் சேர்க்கக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நீட் தர வரிசை பட்டியல் அடிப்படையில் நாடு முழுவதும் பொது மருத்துவ கலந்தாய்வு: தேசிய மருத்துவ ஆணையம் முன்மொழிவு appeared first on Dinakaran.

Related Stories: