கால மாற்றத்துக்கேற்ப போரிட வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்: ராணுவ தலைமை தளபதி பேச்சு

டேராடூன்: இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த வீரர்கள் காலத்திற்கேற்ப மாறிவரும் சவாலை சமாளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். உத்தரகாண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்களிடையே ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பேசியதாவது: ‘‘தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியுடன் போரின் தன்மையும் வேகமாக மாறிவருகின்றது. போர்களமானது மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில் தொழில்நுட்ப திறமை, மன சுறுசுறுப்பு, விமர்சன சிந்தனை மற்றும் விரைவான பதிலடி ஆகியவை வெற்றிக்கு முக்கியமானதாக இருக்கும்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் தங்களது திறமையை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும். காலமாற்றத்துக்கேற்ப போரிட தயாராக இருக்க வேண்டும். உங்கள் பயணம் ராணுவத்தில் நீங்கள் பணியமர்த்தப்படுவதோடு முடிவடைவதில்லை. மாறாக இது சுய முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு வாழ்க்கையின் ஆரம்பம். வீரராக இருக்கும் தொழில் அனைத்து தொழில்களை காட்டிலும் உன்னதமானது. தன்னலமற்ற பக்தியுடன் ஒருவர் தாய் நாட்டிற்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது” என்றார்.

The post கால மாற்றத்துக்கேற்ப போரிட வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்: ராணுவ தலைமை தளபதி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: