ஏர்போர்ட்டின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்த இளம்பெண்: காப்பாற்றிய சிஐஎஸ்எப் வீரர்கள்

பெங்களூருவை சேர்ந்தவர் ஸ்வேதா (22). இவர் நேற்று முன்தினம் இரவு தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தின் இரண்டாம் தளத்தில் நின்றுகொண்டிருந்தார். பின்னர், திடீரென அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து சிஐஎஸ்எப் வீரர்கள் கண்டதும், விரைந்து செயல்பட்டு ஸ்வேதாவை பிடித்தனர். தொடர்ந்து அவரை மேலே தூக்கி பாதுகாப்பாக மீட்டனர். பின்னர், போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்வேதாவிடம் விசாரித்தனர்.

அதில், அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும் ஷம்ஷாபாத் விமான நிலையத்தின் 2வது தளத்தில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்று, சிஐஎஸ்எப் வீரர்கள் காப்பாற்றியதை கீழே இருந்து பதற்றத்துடன் பலர் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்கள் செல்போனில் எடுத்த பரபரப்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஏர்போர்ட்டின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்த இளம்பெண்: காப்பாற்றிய சிஐஎஸ்எப் வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: