இந்தியப் பெருங்கடல் பகுதியில் எஸ்யு-30 ஜெட் விமானங்கள் 8 மணி நேரம் போர் பயிற்சி

புதுடெல்லி: இந்திய பெருங்கடல் பகுதியில் எஸ்யு-30எம்கேஐ ஜெட் விமானங்கள் 8 மணி நேரம் பறந்து போர்பயிற்சி மேற்கொண்டன. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க கடந்த மாதம் 4 ரபேல் போர் விமானங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் 6 மணி நேரம் போர் பயிற்சியை மேற்கொண்டன. நேற்று இந்திய விமானப் படையின் எஸ்யு-30எம்கேஐ ஜெட் விமானங்கள், 8 மணி நேரம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயிற்சி மேற்கொண்டன. இதுபற்றி கடற்படை வெளியிட்ட டிவிட் பதிவில்,’ இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் மற்றொரு பயணம்! இந்த முறை, எஸ்யு-30 விமானங்கள் கிட்டத்தட்ட எட்டு மணிநேரம் பறந்து சாதனை படைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

The post இந்தியப் பெருங்கடல் பகுதியில் எஸ்யு-30 ஜெட் விமானங்கள் 8 மணி நேரம் போர் பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: