லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கு இங்கிலாந்து நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனுமதி அளித்தது. நாடு கடத்தப்படுவதற்கு எதிராக அசாஞ்சே ஒரு ஆண்டாக போராடி வருகின்றார். அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்கான அவரது சமீபத்திய முயற்சியும் தோல்வியடைந்தது. நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை இங்கிலாந்து உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
The post நாடு கடத்தப்படுவதை எதிர்த்த அசாஞ்சே முயற்சி தோல்வி appeared first on Dinakaran.