கொரோனாவால் 3 ஆண்டுகள் தடைபட்டிருந்தது ஐதராபாத்தில் மீன் பிரசாதம் வாங்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்: ஆஸ்துமா, ரத்த சோகைக்கு மருந்து

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஆண்டுதோறும் பாதினி குடும்பத்தினர் இலவசமாக மீன் பிரசாதம் என்ற மருந்தினை வழங்கி வருகின்றனர். இதை சாப்பிடுவதால் ஆஸ்துமா, ரத்த சோகை பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. சுமார் 175 ஆண்டுகளாக இந்த மீன் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏராளமானோர் வருகின்றனர். மீனின் வாயில் மருந்தை விட்டு, அந்த மீனை விழுங்க செய்கின்றனர். ஆண்டுதோறும் 2 நாட்கள் இந்த மீன் பிரசாதம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக இந்த மீன் பிரசாதம் வழங்குவது தடைபட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில உள்ள நம்பள்ளி கண்காட்சி மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து இன்றும் மீன் பிரசாதம் வழங்கப்படுகிறது. பாதினி குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 250 பேர் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மீன் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 32 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். 5 லட்சம் பேருக்கு மீன் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதினி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

The post கொரோனாவால் 3 ஆண்டுகள் தடைபட்டிருந்தது ஐதராபாத்தில் மீன் பிரசாதம் வாங்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்: ஆஸ்துமா, ரத்த சோகைக்கு மருந்து appeared first on Dinakaran.

Related Stories: