வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடையில்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு வெளியிட்ட தடை அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. உள்நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய 2016-ல் தடை விதிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னிய வர்த்தக துறை தலைமை இயக்குநர் அறிவிப்பாணை வெளியிட்டார். இறக்குமதி செய்யப்படும் நாய்களால் உள்நாட்டு நாய்களுக்கு நோய்கள் பரவும் என கூறுவதில் நியாயமில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக 8 வாரங்களில் விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: