ஒரு நாள் முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை: கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் மே 30 முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக்கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. அந்த வகையில் வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தநேரியில் 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக நாளை இரவே டெல்லியில் இருந்து அமித்ஷா, சென்னை வர உள்ளார். இதற்காக 11-ம் தேதி சென்னை வர இருந்த அமித்ஷா தற்போது நாளை இரவே சென்னை வர உள்ளார்.அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க நேரம் கேட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக – அதிமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இருக்கும் எனக் கருதப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியுடன், அமித்ஷா ஆலோசனை நடத்தியதன் தொடர்ச்சியாக இந்த கூட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலம் தொடர்பாக இருதரப்பும் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ஒரு நாள் முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகை: கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: