கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெற்றி: பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு

புவனேஸ்வர்: ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். ஒடிசா மாநில கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தீவில், இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில், ‘அக்னி பிரைம்’ என்ற புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணை நேற்று முன்தினம் இரவு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில், ‘கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தலைமை ‘அக்னி பிரைம்’ என்ற ஏவுகணை சோதனை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

திட்டமிட்டப்படி, இலக்குகளை நோக்கி ஏவுகணை பாய்ந்தது. ராணுவத்தில் இந்த ஏவுகணை சேர்ப்பதற்கு முன்னதாக, தற்போது பரிசோதிக்கப்பட்டது. அக்னி பிரைம் ஏவுகணையின் மூலம், துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி பிரைம் ஏவுகணையின் வெற்றி மற்றும் செயல்திறன்களை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். டி.ஆர்.டி.ஓ மற்றும் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை வெற்றி: பாதுகாப்பு அமைச்சர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: