ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதர, சகோதரிகளும் ஐஏஎஸ், ஐபிஎஸ்: உத்தர பிரதேசத்தில் நெகிழ்ச்சி

லக்னோ: உத்தரபிர தேசத்தில் ஒரே குடும்பத்தை 4 சகோதர, சகோதரிகளும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் படிப்படியாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அடுத்த லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அனில் மிஸ்ரா என்பவருக்கு, யோகேஷ் மிஸ்ரா, மாதவி மிஸ்ரா, க்ஷாமா மிஸ்ரா, யோகேஷ் மிஸ்ரா ஆகிய மகன், மகள்கள் உள்ளனர். இவர்களில் கடந்த 2013ல் யுபிஎஸ்சி தேர்வில் முதன் முதலாவதாக யோகேஷ் மிஸ்ரா தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார். அவரது சகோதரி மாதவி மிஸ்ராவும், தனது சகோதரனின் படிப்பை பின்தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வில் ேதர்ச்சி பெற்று 2015ல் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன்பின் மூத்த சகோதரியான க்ஷாமா மிஸ்ரா, தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்விற்கு படித்து வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நான்காவது முறை தேர்வெழுதி தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியானார்.

அதன்பின் இளைய சகோதரரான லோகேஷ் மிஸ்ரா, யுபிஎஸ்சி தேர்விற்கு படித்து தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி உள்ளார். தற்போது க்ஷாமா மிஸ்ரா பெங்களூரு மாநில போலீஸ் லைன் கமாண்டன்ட் அதிகாரியாகவும், யோகேஷ் மிஸ்ரா ஆயுத தொழிற்சாலையில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், மாதவி மிஸ்ரா ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்ட துணை கமிஷனராகவும் பணியாற்றி வருகின்றனர். லோகேஷ் மிஸ்ரா ஜார்கண்ட் மாநிலம் கோடெர்மா மாவட்டத்தில் போலீஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் 4 பேரும் லால்கஞ்சில் உள்ள கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்களை பெற்று, பின்னர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி சாதித்துள்ளனர். மற்றவர்களுக்கு முன்மாதிரியாக சாதித்து காட்டிய 4 உடன்பிறப்புகளையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

The post ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதர, சகோதரிகளும் ஐஏஎஸ், ஐபிஎஸ்: உத்தர பிரதேசத்தில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: