லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‘அரசியல் தியாகம்’ செய்யணும்!: 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தீவிர முயற்சி

புதுடெல்லி: லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் ‘அரசியல் தியாகம்’ செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் ஆளும் ஒன்றிய பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட புதிய திட்டத்தை வகுத்து வருகின்றன. இம்மாத இறுதியில் பீகார் மாநிலம் பாட்னாவில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் எதிர்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி, சில காங்கிரஸ் தலைவர்களும், அரசியல் நிபுணர்களும் உள்ளனர். இதற்காக எட்டு பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ‘மதச்சார்பற்ற முன்னணி’ என்ற பெயரில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர். 8 பேர் கொண்ட சிறப்பு குழுவில் பேராசிரியர் அபூர்வானந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர், ஜான் தயாள், காங்கிரஸ் எம்பி சசி தரூர், வஜாஹத் ஹபிபுல்லா, ஜவஹர் சிர்கார், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் ராணுவ அதிகாரி பிரவீன் தாவர் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து கன்வீனர் பிரவீன் தாவர் கூறுகையில், ‘நாட்டின் நலன் கருகி, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மோடி அரசை அகற்றவும், நாட்டின் மதச்சார்பின்மையைக் காப்பாற்றவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தி வருகிறேன்.

கடந்த முறையை காட்டிலும் இந்த முறை காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களிலேயே போட்டியிட்டு, மற்ற எதிர்க்கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி அரசியல் தியாகம் செய்தாக வேண்டும். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி ஒத்த கருத்துகளை எதிர்கட்சிகள், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ெரட்டி, மேற்குவங்க முதல்வர் மம்தா போன்ற தலைவர்களை சந்தித்து பேசி வருகிறோம்’ என்றார்.

The post லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ‘அரசியல் தியாகம்’ செய்யணும்!: 8 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தீவிர முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: