சரத் பவாருக்கு கொலை மிரட்டல்: பாஜக நிர்வாகி மீது பெண் எம்பி புகார்

மும்பை: சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது பெண் எம்பி புகார் அளித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாருக்கு, பாஜக நிர்வாகி சவுரப் பிம்பால்கர் என்பவர் சமூக ஊடகங்களின் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து சரத் பவாரின் மகளும், எம்பியுமான சுப்ரியா சூலே, இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் மும்பை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். அதில், ‘எனது தந்தை சரத் பவாருக்கு சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் வருகிறது. இந்த விவகாரம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலரின் கேவலமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். முன்னதாக இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக நிர்வாகி சவுரப் பிம்பால்கர் என்பவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சரத் பவாரின் உடல்மொழியை கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார். இவரது இந்த பதிவால், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

The post சரத் பவாருக்கு கொலை மிரட்டல்: பாஜக நிர்வாகி மீது பெண் எம்பி புகார் appeared first on Dinakaran.

Related Stories: