திருப்பதியில் ஆலோசனை கூட்டம் ஜெகனண்ணா கல்வி பரிசுகளை 10ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்

*கலெக்டர் அறிவுரை

திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில், ஜெகனண்ணா கல்வி பரிசுகளை வரும் 10ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் வெங்கட ரமணா அறிவுரை வழங்கினார்.
அமராவதியில் இருந்து தலைமைச் செயலாளர் ஜவஹர் நேற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து மெய்நிகர் ஆய்வு நடத்தினார். பின்னர், திருப்பதி கலெக்டர் வெங்கட ரமணா முகாம் அலுவலகத்தில் நடந்த ஆலேசானை கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தில் அரசு மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஜெகனண்ணா வித்யா கானுகாவின்(கல்வி பரிசு) தரம் குறித்து, மண்டல் பகுதியில் ஆய்வு நடத்தி, உரிய நேரத்தில் ஸ்டாக் பாயின்டில் இருந்து வரும் 10ம் தேதிக்குள் பள்ளிகளுக்குச் சென்றடைய வேண்டும். மேலும், பள்ளிகளில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக வழங்க வேண்டும். சத்து பானம் ராகி ஜாவாவும், ஜெகனண்ணாவும் கோரமுத்தாவை முறையாக செயல்படுத்த வேண்டும்.

மாவட்டத்தல், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரைகளை வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 18,360 கர்ப்பிணிகளின் நிலையை அறிந்து, பிரசவத்தின் 10 நாட்களுக்கு முன்பாகவே பிஎச்சி மருத்துவர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கண் பார்வை குறைபாடு உள்ள முதியோர்களுக்கு செய்யும் கண்புரை அறுவை சிகிச்சைகளை கவனம் செலுத்தி முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பதியில் ஆலோசனை கூட்டம் ஜெகனண்ணா கல்வி பரிசுகளை 10ம் தேதிக்குள் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: