+2 துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..!

சென்னை: +2 துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 14.06.2023 அன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் Www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘Click செய்தாய் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNEJULY 2023 HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை Click’ செய்து நோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தாப் பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth) பதிவு செய்குட அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும் உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவனையினை (TIME TABLE) www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post +2 துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்..! appeared first on Dinakaran.

Related Stories: