சாத்தான்குளத்தில் தொடர் பைக் திருட்டால் வாகன ஓட்டிகள் அச்சம்

சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் தொடர்ந்து பைக் திருடு போவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சாத்தான்குளம் முதலூர் செல்லும் சாலையில் விஜயராமபுரம் விலக்கில் உள்ள தோட்டத்தில் கடந்த வாரம் நிறுத்தியிருந்த செயின்ட் ஜான்ஸ் ஆங்கில பள்ளி முதல்வர் சார்லஸ் ஞானகுமார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதேபோல் கீழரத வீதியில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கி முன்னால் கடந்த 5 நாட்களுக்கு முன் நிறுத்தியிருந்த கட்டிட தொழிலாளி சரவணன் என்பவரது பைக்கும் திருட்டு போனது. இதேபோல் சாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் அருகில் நிறுத்தியிருந்த டைல்ஸ் கடை உரிமையாளர் பைக்கும் திருட்டு போனது.

இதுகுறித்து பைக்கை இழந்தவர்கள் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த ஆண்டு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் வீட்டில் நிறுத்தியிருந்த பைக் திருட்டு போனது. திருட்டு குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாத்தான்குளத்தில் பல இடங்களில் வியாயாரிகள் சங்கம், போலீசார் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா கண்ட்ரோல் ரூம் வியாபாரிகள் சங்க அலுவலகம் மற்றும் காவல் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளன. எனவே கண்காணிப்பு கேமரா பதிவுகளை தினமும் பார்வையிட்டு சந்தேகம்படி திரியும் நபர்களை கண்காணிக்க வேண்டும். பைக்குகளை திருடிச் செல்லும் நபர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சாத்தான்குளத்தில் தொடர் பைக் திருட்டால் வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: