கேரளாவில் 12ம் தேதி 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக நேற்று தொடங்கியது. லட்சத்தீவு, அந்தமான் பகுதியில் தொடங்கிய இந்த மழை நேற்று முதலே மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் இந்த மழை மன்னார் வளைகுடா முதல் தென்தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வருகிற 12ம் தேதி வரை மாநில நிர்வாகம் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நாட்களில் மலையோர பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்றும் கடலோர கிராமங்களில் சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவின் பொழியூர் முதல் காசர்கோடு வரையிலான கடல்பகுதியில் கடல் சீற்றம் காணப்படும், அலைகள் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும், என கூறப்பட்டுள்ளது. பிபோர்ஜோய் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை இயல்புக்கும் குறைவாக பெய்யும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்போது பிபோர்ஜோய் புயல் காரணமாக பருவமழை பொழிவில் பாதிப்பு இருக்காது என்றும் இயல்பான அளவுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post கேரளாவில் 12ம் தேதி 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: