27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி: 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்க தயார்

டெல்லி: 27 ஆண்டுகளுக்குப் பிறகு உலக அழகி போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக அழகி போட்டி கடைசியாக 1996ம் ஆண்டு பெங்களுருவில் நடைபெற்றது.

கடந்த 1951ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த எரிக் மோர்லே என்பவர் மிஸ் வேர்ல்டு போட்டியை தொடங்கினார். இதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாட்டில் உலக அழகி போட்டி நடைபெற்று வருகிறது . இதன்படி கடந்த 1996ம் ஆண்டில் உலக அழகி போட்டி இந்தியாவில் பெங்களுருவில் நடைபெற்றது.

இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்டு 2023 அழகி போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. 71ஆவது மிஸ் வேர்ல்டு போட்டி வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 130 நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். அழகு, பன்முகத்தன்மை ,பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த உலக லகிப்போட்டி நடைபெற்று வருகிறது.

இதுவரை ரீட்டா, ஐஸ்வர்யாராய் ,டயானா, யுக்தா முகி , பிரியங்கா சோப்ரா, மனுஷி சில்லார் உள்ளிட்ட 6 இந்திய பெண்கள் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உலக அழகி போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறியதாவது;

“மீண்டும் இந்தியாவில் உலக அழகி போட்டி நடக்கவுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒரு மாதத்துக்கு நடக்கும் இந்த போட்டியில், 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர். தற்போது ஐரோப்பிய நாடான போலந்தைச் சேர்ந்த கரோலினா உலக அழகியாக உள்ளார். இவர், தற்போது இந்தியா வந்துள்ளார்.

அவர் கூறுகையில், ”உலகில் மிகச் சிறந்த விருந்தோம்பல் கலாசாரம் உடைய நாடு, இந்தியா. இதை என் தாய் வீடு போல் உணர்கிறேன். இங்கு உலக அழகிப் போட்டி நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

The post 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி: 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்க தயார் appeared first on Dinakaran.

Related Stories: