வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது

புழல்: புழல் அருகே விநாயகபுரம், கல்பாளையம், அண்ணா தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (30). கடந்த வாரம் இப்பகுதியில் சில வாலிபர்கள் பைக்கில் வேகமாக சென்றனர். அவர்களை பச்சையப்பன் தட்டி கேட்டுள்ளார். இதில், ஆத்திரமான அதே பகுதியை சேர்ந்த அதிமுக 30வது வட்ட செயலாளர் கந்தராஜ் (34), அவரது உறவினர் கார்த்திக் (26) ஆகிய இருவரும் பச்சையப்பனின் வீட்டுக்கு சென்று, நீ யார், எங்களை கேள்வி கேட்க. நாங்கள் யார் என தெரியாதா, எனக் கேட்டு வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த கந்தராஜ், கார்த்திக் ஆகியோர், பச்சையப்பனை கிரிக்கெட் மட்டையால் சரமாரி தாக்கினர். இதில் படுகாயமடைந்த பச்சையப்பன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து புழல் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், புழல் காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிமுக வட்ட செயலாளர் கந்தராஜ், கார்த்திக் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வீடு புகுந்து தாக்கிய வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: