ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டம் கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில்

கே.வி.குப்பம், ஜூன் 9: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று ஊராட்சி செயலாளர்களுக்கான சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வட்டார ஊராட்சி பிடிஓ மனோகரன் தலைமை தாங்கினார். கிராம ஊராட்சி பிடிஓ கல்பனா முன்னிலை வகித்தார். வட்டார ஊராட்சி மேலாளர் ஆனந்தி வரவேற்றார். இதில் சமூக தணிக்கை, ஊராட்சிகளில் வழக்கமாக செலுத்தும் வீட்டு வரி, நில வரி ஆகிய வரிகள் இதுநாள் வரை வரி வசூல் செய்யும் முறையினை விட்டுவிட்டு, இனி வரும் காலங்களில் ஆன்லைன் முறையில் செலுத்த அறிவுறித்தப்பட்டது.

ஆன்லைன் மூலம் வரி வசூல் செய்யும் முறை குறித்த பயிற்சி விளக்கம் ஊராட்சி செயலாளர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சியில், நிலுவையில் உள்ள வரிகளை வசூல் செய்வது, கிராம ஊராட்சி சேவை மையத்தில் நிலுவையில் உள்ள இணையதள பாக்கியை செலுத்துவது, அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ஆதார் அட்டை இணைப்பது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், ஜல் ஜீவன் மெஷின் திட்டம், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், 15-வது நிதி குழு மான்யம், அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், உட்பட திட்டங்களின்கீழ் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பது, ஊராட்சி வாரியாக தேவையற்ற மின் இணைப்புகளை துண்டித்து விட வேண்டும், ஆவணங்கள் இணையதள மூலம் பாதுகாப்பது உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில் கே.வி.குப்பம் ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டம் கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் appeared first on Dinakaran.

Related Stories: