மூத்த தலைவர்களை கட்சிப்பணிக்கு அனுப்ப முடிவு அமைச்சரவையை மாற்ற பிரதமர் மோடி திட்டம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு ஒன்றிய அமைச்சரவையை மாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார். நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முதல்கட்ட ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்யத் தொடங்கிவிட்டது. பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா கட்சியும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக தொடங்கி இருக்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த சில தினங்களாக டெல்லியில் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் மேற்கொள்ள வேண்டிய கூட்டணி மற்றும் போட்டியிட வேண்டிய தொகுதிகள் குறித்து அவர் பட்டியல் தயாரித்துள்ளார். இதன் அடிப்படையில் கூட்டணி ஒப்பந்தங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதால் கூட்டணியில் சில புதிய கட்சிகளை சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், கர்நாடகாவில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம், பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலிதளம் கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று தெரிகிறது. இதற்கு ஏற்றார்போல் அமைச்சரவையிலும் மாற்ற செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மூத்த பா.ஜ தலைவர்களைகட்சிப்பணிக்கு அனுப்பவும் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post மூத்த தலைவர்களை கட்சிப்பணிக்கு அனுப்ப முடிவு அமைச்சரவையை மாற்ற பிரதமர் மோடி திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: