பாலியல் தொல்லை தரவில்லை பா.ஜ எம்பி பிரிஜ் பூஷன் அப்பாவி: சிறுமியின் தந்தை அந்தர் பல்டி

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் தனது மகளுக்கு பாலியல் தொல்லை தரவில்லை என சிறுமியின் தந்தை கூறியிருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்களைகளுக்கு தொடர் பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்தது. அவரை கைது செய்யவும், பதவி நீக்கவும் செய்ய வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதுதொடர்பாக பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின்கீழ் டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருடன் மல்யுத்த வீராங்கனைகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்களின் போராட்டம் ஜூன் 15வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிஜ் பூஷன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை தரவில்லை என சிறுமி ஒருவரின் தந்தை டெல்லி மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறும்போது, “கடந்த ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் என் மகள் தோல்வி அடைந்தாள். அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் மீது பாலியல் புகார் சுமத்தினேன். தற்போது என் மகளின் தோல்வி குறித்து நியாயமான விசாரணை நடத்த அரசாங்கம் உறுதி அளித்துள்ளது. அதனால் என் தவறை திருத்திக் கொள்கிறேன். நான் பொய் கூறியதை ஒப்புக் கொள்ள விரும்பினேன்” இவ்வாறு கூறியுள்ளார். சிறுமியின் தந்தை அளித்துள்ள புதிய வாக்குமூலத்தால் பிரிஜ் பூஷன் மீதான விசாரணையில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

The post பாலியல் தொல்லை தரவில்லை பா.ஜ எம்பி பிரிஜ் பூஷன் அப்பாவி: சிறுமியின் தந்தை அந்தர் பல்டி appeared first on Dinakaran.

Related Stories: