வாலிபர் தற்கொலை

 

சூலூர், ஜூன் 9: சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சந்திரகுமார் என்ற வாலிபர் வேலை நேற்று பணியாற்றி கொண்டு இருந்தார். அப்போது பண்ணையில் இருந்த இறைச்சிகள் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தும் பார்மாலின் எனப்படும் திராவகத்தை குடித்துள்ளார்.

குடித்து சிறிது நேரத்தில் வயிறு எரிச்சல் தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சந்திரகுமார் சிகிச்சை பலனிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சூலூர் போலீசார் விசாரிகின்றனர்.

The post வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: