சமைக்கவில்லை என கணவன் கண்டித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை

வேளச்சேரி: சமைக்கவில்லை என கணவன் கண்டித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் நன்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேளச்சேரி அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேச பெருமாள் (34). தனியார் ஊழியர். இவரது மனைவி பிரியதர்ஷினி (29). இவர்களுக்கு சாய் விநாயக் (3), சாய் வேலன் என்ற 8 மாத ஆண் குழந்தைகள் உள்ளன. நேற்று காலை குடும்ப தகராறில் பிரியதர்ஷினி சமைக்கவில்லை. இதனால், குழந்தைகள் பசியால் அழுதுள்ளனர். எனவே, கோபமடைந்த வெங்கடேச பெருமாள் பிரியதர்ஷினியை கண்டித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அவர், மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து, அதிர்ச்சியடைந்த வெங்கடேச பெருமாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரியதர்ஷினியை மீட்டு, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, இவரது தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post சமைக்கவில்லை என கணவன் கண்டித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: