பிரான்ஸ் பூங்காவில் 4 குழந்தைகளை கத்தியால் குத்திய நபர் கைது

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் 4 சிறுவர்களை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். தென்கிழக்கு பிரான்சில் ஆல்ப்ஸ் நகரில் உள்ள அன்னேசி பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டும், பெரியவர்கள் ஓய்வெடுத்து கொண்டும் இருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் குழந்தைகளையும், பெரியவர்களையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் 22 மாதம் முதல் 3 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய 32 வயது மதிக்கத்தக்க சிரிய நாட்டை சேர்ந்தவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post பிரான்ஸ் பூங்காவில் 4 குழந்தைகளை கத்தியால் குத்திய நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: