நாடு முழுவதும் 50 புதிய மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் 3 கல்லூரிகளுக்கு அனுமதி: எம்பிபிஸ் இடங்கள் 1,07,658 ஆக உயர்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 50 புதிய மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது வெளியிட்டது. இந்த 50 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 30 அரசு மருத்துவக்கல்லூரிகள். 20 தனியார் மருத்துவக்கல்லூரிகள் ஆகும்.இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை 702 ஆக உயர்ந்து உள்ளது. இதனால் எம்பிபிஎஸ் படிப்புக்கான மொத்த இடங்கள் 1,07,658 ஆக உயரும். புதிதாக அனுமதி கொடுக்கப்பட்ட 50 புதிய மருத்துவக் கல்லூரிகளில், 13 மருத்துவக் கல்லூரிகள் தெலங்கானாவிலிலும், ஆந்திரப் பிரதேசத்தில் 5, ராஜஸ்தானில் 5, மகாராஷ்டிராவில் 4 கல்லூரிகளும் இடம் பெற்றுள்ளன.

இவை தவிர அசாம், குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தலா 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அரியானா, ஜம்மு காஷ்மீர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் தலா 2 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தைப் பெற்றன. மத்தியப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை தலா ஒரு மருத்துவக் கல்லூரியைப் பெற்றுள்ளன. மேலும் கூடுதலாக 8195 எம்பிபிஎஸ் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

The post நாடு முழுவதும் 50 புதிய மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் 3 கல்லூரிகளுக்கு அனுமதி: எம்பிபிஸ் இடங்கள் 1,07,658 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: