போலீஸ்காவலில் 41 பேர் பலி அமித்ஷாவுக்கு கபில்சிபல் கேள்வி

புதுடெல்லி: உபியில் போலீஸ் காவலில் இருக்கும் ரவுடிகள் அதிகம்பேர் கொல்லப்பட்டு வருகிறார்கள். 2017 முதல் 2022 வரை 41 ரவுடிகள் ெகால்லப்பட்டுள்ளனர். மேலும் ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் உள்ளிட்டோரும், நேற்று முன்தினம் அன்சாரி கூட்டாளி சஞ்சீவ் மகேஸ்வரி ஜீவாவும் ெகால்லப்பட்டனர். இதுபற்றி மாநிலங்களவை எம்பி கபில்சிபல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

டிவிட்டர் மூலம் அவர் கூறியிருப்பதாவது;
எப்படி மற்றும் ஏன்: உ.பி.யில் (2017-2022) போலீஸ் காவலில் 41 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் போலீஸ் காவலில் லக்னோ நீதிமன்றத்தில் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது ஆதிக் மற்றும் அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டனர். திகாரில் துல்லு தாஜ்பூரியா சுட்டுக் கொல்லப்பட்டார். இதுபற்றி அமித்ஷா, நீங்கள் கவலைப்படவில்லையா? நாங்கள் கவலைப்படுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post போலீஸ்காவலில் 41 பேர் பலி அமித்ஷாவுக்கு கபில்சிபல் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: