300 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி 52 மணி நேரம் போராடி மீட்ட சிறுமி பரிதாப பலி

செஹோர்: மபியில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய இரண்டரை வயது சிறுமி 52 மணி நேரம் கழித்து மீட்கப்பட்டாள். அவள் மருத்துவமனையில் பலியானாள். மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை சிருஷ்டி தவறி விழுந்தது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 135 அடியில் சிக்கிய அந்த குழந்தை சுமார் 52 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்து மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post 300 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி 52 மணி நேரம் போராடி மீட்ட சிறுமி பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: