புதுடெல்லி: மாணவர்கள் பாஸாக தேவையான மதிப்பெண் பெற்றால் பட்டம், டிப்ளமோ சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. தேசிய கல்வி கொள்கை 2020, மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரு பட்டப் படிப்புடன் மற்றொரு பாடப்பிரிவு பட்டப் படிப்பை தொடரவும், அதில் இருந்து விலகவும் அனுமதி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்டப்படிப்பு விவரங்கள் மற்றும் பெயரிடப்படாத புதிய பட்டப் படிப்புகள் குறித்து தேசிய மதிப்பெண் கட்டமைப்பு மற்றும் இளங்கலை படிப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் கட்டமைப்பு தொடர்பான யுஜிசி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், “மாணவர்கள் ஒரு படிப்பை அந்த படிப்புக்கான ஆண்டுகள் முடிந்த பிறகும் எத்தனை ஆண்டுகள் படித்து முடிக்கின்றனர் என்பதை பொருட்படுத்தாமல், வெற்றி பெறுவதற்கு தேவையான மதிப்பெண்களை எப்போது பெறுகிறார்களோ அப்போது அந்த படிப்புக்குரிய பட்டப் படிப்பு சான்றிதழோ அல்லது டிப்ளமோ சான்றிதழோ வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
The post பட்டப்படிப்பு, டிப்ளமோவுக்கு இனிமேல் பாஸ் ஆனால் தான் சான்றிதழ்: யுஜிசி அறிவிப்பு appeared first on Dinakaran.