முதல் முறையாக இரவு நேரத்தில் புதிய அக்னி பிரைம் ஏவுகணை சோதனை

பாலசோர்: புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணையானது ஒடிசாவில் நேற்று முதல் முறையாக இரவு நேரத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது. அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் நவீன அக்னி பிரைம் ஏவுகணையானது ஏற்கனவே மூன்று முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அக்னி பிரைம் ஏவுகணையின் துல்லியம் மற்றும் செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் நேற்று முதல் முறையாக இரவு நேரத்தில் சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவின் பாலசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதற்காக பல்வேறு இடங்களில் ரேடார், டெலிமெட்ரிக், மின்னணு கண்ணாடி இழை கண்காணிப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தது. அணு ஆயுதம் தாங்கிய அக்னி பிரைம் ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஆயுத படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post முதல் முறையாக இரவு நேரத்தில் புதிய அக்னி பிரைம் ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: