நிசான் மேக்னைட் கெசா

நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் நிசான் மேக்னைட் கெசா என்ற ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.7,39,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இந்த ஸ்பெஷல் எடிஷனை அனைத்து நிசான் ஷோரூம்களிலும் ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம். 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ஸ் சிஸ்டம், பிரீமியம் ஜெபிஎல் ஸ்பீக்கர்கள், ஆப்ஸ்-அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் சுற்றுப்புற விளக்குகள், வழிகாட்டுதல்களுடன் பின்புற கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

மேலும், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர்களில் காற்று அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இரண்டு விதமான பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகட்சமாக 6,250 ஆர்பிஎம்-ல் 71பிஎச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்-ல் 96 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுபோல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 5,000 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 2,800 முதல் 3,600 ஆர்பிஎம்-ல் 160 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது.

The post நிசான் மேக்னைட் கெசா appeared first on Dinakaran.

Related Stories: