பீகாரில் பாலத்தின் தூணுக்கும் சுவருக்கும் இடையே சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி 24 மணி நேரத்திற்கு மேலாக தொடர்கிறது..!!

பீகார்: பீகார் மாநிலத்தின் பாலத்தின் சுவருக்கும் தூணுக்கு இடையே 24 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிக் கொண்டு இருக்கும் 12 வயது சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நசிரிக்கன்ஸ் அடுத்த கிரியாவ் என்ற கிராமத்தை சேர்ந்த போலாஷா என்பவரின் 12 வயது மகன் ரஞ்சன் குமார். சற்று மனநலம் குன்றிய இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் காணாமல் போய் உள்ளார்.

இந்நிலையில் ரோஹ்தாஸ் மாவட்டம் நசிரிக்கன்ஸ் பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாலத்தின் தூணுக்கும் சுவருக்கும் இடையே உள்ள இடைவெளியில் சிறுவன் ஒருவன் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவர் ரஞ்சின் குமார் என்பது தெரியவந்தது. உடனடியாக சிறுவனை மீட்க நிகழ்விடத்துக்கு வந்த மீட்பு படையினர் கடந்த 24 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதை தவிர்க்க ஆக்ஸிசன் சிலிண்டர் மூலமாக ஆக்ஸிசன் அளித்து வருகின்றனர்.

சிறிய இடைவெளியில் சிறுவன் உருவம் தெரிவதாகவும், கைகளை அசைத்து குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கும் மீட்பு படையினர் பாலத்தின் மேற்பகுதியில் இருந்து துளையிட்ட சிறுவனை மீட்கும் முயற்சியை தொடர்ந்து வருகின்றனர். நல்வாய்ப்பாக பாலத்தின் அடியில் சிறுவன் விழாமல் இருப்பதாக கூறும் மீட்பு படையினர் சிலமணி நேரத்தில் சிறுவனை மெட்டு விட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சுமார் ஒரு அடி இடைவெளியில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி 24 மணி நேரத்தை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

The post பீகாரில் பாலத்தின் தூணுக்கும் சுவருக்கும் இடையே சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி 24 மணி நேரத்திற்கு மேலாக தொடர்கிறது..!! appeared first on Dinakaran.

Related Stories: