ஒன்றிய அரசின் உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்: மாவட்டங்களில் கோவை முதலிடம்.!

சென்னை: ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. இன்று சர்வதேச உணவுப் பாதுகாப்புத் தினமாகும். இந்தத் தினத்தினையொட்டி ஒன்றிய அரசு உணவுத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலின்படி, தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. கேரளா முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த உணவுத் தரவரிசைப் பட்டியலானது உணவின் தரம், அளவு, சுவை போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

மாவட்டங்களுக்கான தரப் பட்டியலில், 231 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், 31 மாவட்டங்கள், 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளன. தமிழ்நாட்டிற்குள் எடுத்துக்கொண்டால் கோயமுத்தூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. மேலும் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேலான மதிப்பெண்களை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post ஒன்றிய அரசின் உணவுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம்: மாவட்டங்களில் கோவை முதலிடம்.! appeared first on Dinakaran.

Related Stories: