கனடாவில் பல மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ: அண்டை நாடான அமெரிக்காவிலும் புகை மூட்டம்

ஒட்டாவா: கனடாவின் பல்வேறு மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயால் அண்டை நாடான அமெரிக்காவில் கரும் புகை சூழ்ந்துள்ளது. நியூயார்க்கிலும் வரலாறு காணாத அளவுக்கு காற்றின் தரம் மோசமடைந்து சூரிய கதிர்வீச்சு போல் நகரமே ஆரஞ்சு புகை மூடி காட்சியளிக்கிறது. கனடாவில் கொளுத்தும் கோடை வெயில் காரணமாக அடர்ந்த வனப்பகுதிகளில் தீப்பற்றி எரிகிறது. அதன் மேற்கு பிராந்தியங்களில் காட்டுத்தீ பற்றுவது வழக்கமான ஒன்று என்றாலும், நடப்பாண்டு கிழக்கு பிராந்தியங்களிலும் காளான்கள் போல நெருப்பு பரவி உள்ளது.

இதனால் மக்கள் தொகை அதிகம் உள்ள ஆன்டாரியோ, கீயூபெக், பிரிடிஷ் கொலம்பியா, நோவாஸ் காட்ஷியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பச்சை பசேலென இருந்த பல ஹெக்டர் நிலங்கள் தீயில் கருகி உள்ளன. கனடாவில் காட்டுத்தீ அதிகம் உள்ள பகுதிகளில் அவரசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவர்களது வளர்ப்பு பிராணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளன. நெருப்பை அணைக்கும் பணியில் பேரிடர் வீரர்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post கனடாவில் பல மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ: அண்டை நாடான அமெரிக்காவிலும் புகை மூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: