உத்திரபிரதேசத்தில் 13வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை..!!

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாஸ்தி மாவட்டத்தில் உள்ள கோவர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 13 வயது சிறுமி கடந்த திங்கட்கிழமை காய்கறி வாங்க கடைக்கு சென்றார்.

அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை இதனால் பல இடங்களில் தேடிய பெற்றோர் மறுநாள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திலிருந்து சிறுமியை காயங்களுடன் மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருந்தது உறுதியானது.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக போக்சோ மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியை சேர்ந்த மோனுசாக், ராஜன் நிஸாக் மற்றும் குந்தன் சிங் ஆகியோரை கைது செய்தனர். சிறுமியின் குடும்பத்தினரால் நன்கு அறியப்பட்ட சாத்மி சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒருவர் பாஜக கிசான் மோட்சா சங்கத்தின் துணை தலைவராக இருந்தவர் என விசாரணையில் அம்பலமாகியுள்ளது. முன்னதாக சிறுமி உயிரிழப்புக்கு காரணமானவர்களை பாஜக பாதுகாக்க முயற்சிப்பதாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

The post உத்திரபிரதேசத்தில் 13வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொலை..!! appeared first on Dinakaran.

Related Stories: