ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை திறந்து வைத்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா!!

ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்துள்ளார். திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பல ஊர்களிலும் சீனிவாச திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக மற்ற ஊர்களிலும் ஏழுமலையானுக்கு கோவில்கள் அமைக்கும் பணியை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.

அந்த வகையில் ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில் அமைக்கப்பட்டது. ஜம்முவின் சித்ரா பகுதியில் 62 ஏக்கர் நிலத்தில் ரூ. 725 கோடி மதிப்பில் ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டளது.இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த கோவிலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்படும் 6-வது கோவிலாக ஜம்முவில் புதிய கோவில் அமைந்துள்ளது.

 

The post ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலை திறந்து வைத்தார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா!! appeared first on Dinakaran.

Related Stories: