மும்பை அருகே பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய நபர் கைது..!!

மும்பை: மும்பை அருகே பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். மும்பை மகாராஷ்டிராவில் உள்ள மீரா ரோடு நகரில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் 32 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையானது கடந்த 2-3 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்றும், அந்த பெண்ணை அவரது லிவ் இன் பார்ட்னர் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

56 வயதான மனோஜ் சஹானி என்ற நபர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக 32 வயதான சரஸ்வதி வைத்யாவுடன் மீரா ரோடு பகுதியின் கீதா ஆகாஷ் டீப் கட்டிடத்தின் ஜே பிரிவில் உள்ள பிளாட்ல் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூடப்பட்ட குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரில் அடிப்படையில், காவல் நிலையத்தை சேர்ந்த ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை உடைத்தனர். மேலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, சரஸ்வதி பல துண்டுகளாக வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது சில பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, மனோஜ் சஹானி தனது குடியிருப்பில் இருந்து தப்பி செல்ல முயன்றபோது காவல்துறையினரால் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மும்பை அருகே பெண்ணை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய நபர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: