ரயில் விபத்தில் கணவன் இறந்ததாக பொய் கூறி இழப்பீடு தொகையை மோசடி செய்ய பெண் முயற்சி: பிரிந்து வாழும் கணவர் போலீசில் புகார்

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.5லட்சம் இழப்பீடு தொகை அறிவித்தார். பிரதமர் மோடி ரூ.2 லட்சம் மற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் ரூ.10லட்சம் என மொத்தம் ரூ.17 லட்சம் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டாக் மாவட்டத்தில் உள்ள மனியபந்தா பகுதியை சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்பவர், விபத்தில் தனது கணவர் இறந்துவிட்டதாக கூறி சடலத்தையும் அடையாளம் காட்டினார்.

அவரது ஆவணங்களை சோதனை செய்ததில் அவர் கணவர் இறந்துவிட்டதாக பொய் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் 13 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பிய நிலையில், அவரது கணவர் பிஜய் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விபத்து நிகழ்ந்த பாலசோர் மாவட்டத்தில் பஹாநகா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை போலியாக உரிமை கொண்டாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே மற்றும் ஒடிசா போலீசாருக்கு தலைமை செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.

The post ரயில் விபத்தில் கணவன் இறந்ததாக பொய் கூறி இழப்பீடு தொகையை மோசடி செய்ய பெண் முயற்சி: பிரிந்து வாழும் கணவர் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: