16,000 இதய நோயாளிகளை காப்பாற்றிய 41 வயது டாக்டர் மாரடைப்பால் மரணம்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). இதய சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். இவர் தனது பணிக் காலத்தில்16,000 இதய நோயாளிகளை காப்பாற்றி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய அவர், இரவு உணவுக்குப் பிறகு படுத்து தூங்கினார். நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் எழாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றனர். அவர் எழுந்திருக்காததால், உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார் என தெரிவித்தனர். 16,000 பேரை இதய நோயில் இருந்து காப்பாற்றிய டாக்டர் மாரடைப்பால் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

The post 16,000 இதய நோயாளிகளை காப்பாற்றிய 41 வயது டாக்டர் மாரடைப்பால் மரணம் appeared first on Dinakaran.

Related Stories: