நிலக்கரி, பழுப்பு நிலக்கரி ஆய்வுக்கு ₹2,980 கோடி: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க உதவும் வகையில், நிலக்கரி வளங்கள் தொடர்பான ஆதாரங்களை நிரூபிக்கவும் மதிப்பிடவும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு அவசியமானதாகும். இந்த ஆய்வின் மூலம் தயாரிக்கப்படும் புவியியல் அமைப்பு தொடர்பான அறிக்கைகள், புதிய நிலக்கரிச் சுரங்கத் தொகுதிகளை ஏலம் விட பயன்படுத்தப்பட்டு, அதன்பின் ஒதுக்கீடு பெறுபவர்களிடமிருந்து செலவு வசூலிக்கப்படும்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி கண்டறிதல் தொடர்பான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டிலிருந்து 2025-26-ஆம் நிதியாண்டு வரை 15-வது நிதி ஆணையத்தின் திட்டப்படி ரூ.2,980 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு பிராந்திய ஆய்வு ஊக்குவிப்பு, கோல் இந்தியா நிறுவன எல்லைக்கு உட்படாத பகுதிகளில் விரிவான ஆய்வு என இரண்டு நிலைகளில் ஆய்வு நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

The post நிலக்கரி, பழுப்பு நிலக்கரி ஆய்வுக்கு ₹2,980 கோடி: ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: