திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு வாரம் அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் உலக கேரள சபை மாநாடு நாளை (9ம் தேதி) முதல் 11 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை 10ம் தேதி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார். இதன்பின் 12ம் தேதி வாஷிங்டனில் உலக வங்கியின் தெற்காசியா உதவி தலைவர் மார்ட்டின் ரெய்சரை சந்தித்து பேசுகிறார். 14ம் தேதி அவர் நியூயார்க்கில் இருந்து கியூபா செல்கிறார். 15, 16 ஆகிய தேதிகளில் ஹவானாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
The post கேரள முதல்வர் அமெரிக்கா சுற்றுப்பயணம் appeared first on Dinakaran.