3 சவரன் தங்க நகை திருட்டு எஸ்பியிடம் தொழிலாளி புகார் காத்தாடிகுப்பம் கிராமத்தில்

குடியாத்தம், ஜூன் 8: குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் (38இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காத்தாடி குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது
அப்போது ஜெயசீலன் அவரது மனைவி ரேவதி ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான மாடு குட்டைக்கு கொட்டாய்க்கு சென்று மாடு பிடித்து வேறு இடத்தில் கட்டினார். பின்னர் மழை நின்றதும் அருகில் உள்ள வீட்டிற்குள் சென்றுள்ளனர் அப்போது பீரோ திறந்த நிலையில் இருந்தது இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பீரோவை பார்த்த போது அதிலிருந்து சுமார் 3 சவரன் தங்க நகை , 100 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்துள்ளது பின்னர் இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை மற்றும் விசாரணை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோர் வேலூர் எஸ்பி மணிவண்ணனிடம் புகார் அளித்துள்ளனர். அதன்படி இது குறித்து நேற்று தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

The post 3 சவரன் தங்க நகை திருட்டு எஸ்பியிடம் தொழிலாளி புகார் காத்தாடிகுப்பம் கிராமத்தில் appeared first on Dinakaran.

Related Stories: